அரசு பணிக்கு போட்டி தேர்வுகள்: வருடாந்திர தேர்வு கால அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகிறது - டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 25, 2016

அரசு பணிக்கு போட்டி தேர்வுகள்: வருடாந்திர தேர்வு கால அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகிறது - டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி அறிவிப்பு

அரசு பணி போட்டித் தேர்வுகளுக்கு இந்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கே.அருள்மொழி தெரிவித்தார்.

அரசு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர் பதவிகளில் 1,947 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2-ஏ எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்பட தமிழகம் முழுவதும் 116 இடங்களில் 8 லட்சத்து 60 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். சென்னையில் மாநிலக் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, சாந்தோம் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, ரோசரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி என்கேடி தேசிய பெண்கள் மேல் நிலைப்பள்ளி, லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி உள்பட 209 மையங்களில் 91 ஆயிரத்து 939 பேர் தேர்வெழுதினர். என்கேடி பள்ளி தேர்வு மையத்தை டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா, சென்னை மாவட்ட புதிய ஆட்சியர் கே.கோவிந்தராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது: நேர்காணல் அல்லாத பணிகளுக்காக நடத்தப்படும் குரூப்-2ஏ தேர்வில் 4 லட்சத்து 7 ஆயிரம் பெண்கள் உள்பட மொத்தம் 8 லட்சத்து 60 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர். 1,947 காலியிடங்களுக்கு இவ்வளவு பேர் தேர்வெழுதியிருப்பதால் போட்டி கடுமையாகத்தான் இருக்கும். இருப்பினும், தகுதி இருப்பவர்கள் கண்டிப்பாக தேர்வில் வெற்றி பெற முடியும். தேர்வு முடிவுகளை எவ்வளவு விரைவாக வெளியிட முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியிடு வோம். அதேபோல், ஏற்கெனவே நடத்தப்பட்ட நேர்காணல் உள்ள பணிகளுக்கான குரூப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும்.

எந்தெந்த அரசு பணிக்கு என்னென்ன போட்டித் தேர்வுகள் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்ட வணை தயாரிக்கும் பணி முழுவீச் சில் நடைபெற்று வருகிறது.இன் னும் ஒரு வாரத்தில் தேர்வு கால அட்டவணை வெளியிடப்படும்.

இவ்வாறு அருள்மொழி கூறினார்.

No comments:

Post a Comment