மாதம் 6 டிக்கெட் மட்டுமே முன்பதிவு: ஐஆர்சிடிசி அதிரடி கட்டுப்பாடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, January 29, 2016

மாதம் 6 டிக்கெட் மட்டுமே முன்பதிவு: ஐஆர்சிடிசி அதிரடி கட்டுப்பாடு

முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக ரயில்வே அமைச்சகம், டிக்கெட் முன்பதிவு முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர உள்ளது.

இதன்படி, தனிப்பட்ட பயனரால் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் மாதத்துக்கு 6 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்த முறை பிப்ரவரி 15, 2016 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து, ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''90 சதவீத பயனர்கள், மாதத்துக்கு ஆறு டிக்கெட்டுகளுக்குக் குறைவாகவே முன்பதிவு செய்கின்றனர். 10 சதவீத பயனர்கள்தான், ஆறு டிக்கெட்டுகளுக்கு மேல் முன்பதிவு செய்கின்றனர். ஆய்வொன்றின் மூலம் இது தெரிய வந்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட புதிய விதிமுறைகளின்படி,

1. தனிப்பட்ட பயனர்கள் தங்களுடைய ஐடியின் மூலம், ஒரு நாளில் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை, இரண்டு டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்யமுடியும்.

2. தனிப்பட்ட பயனர்கள் தங்களுடைய ஐடியின் மூலம், தட்கல் நேரமான காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை, இரண்டு டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்யமுடியும்.

3. தனிப்பட்ட பயனரால் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ஒரு மாதத்துக்கு 6 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

4. விரைவு முன்பதிவு ஆப்ஷனை, காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உபயோகப்படுத்த முடியாது.

5. ஒய்டிஎஸ்கே, ஆர்டிஎஸ்ஏ, ஐஆர்சிடிசி உள்ளிட்ட அனைத்து ஐஆர்சிடிசி முன்பதிவு முகவர்களும் முன்பதிவு ஆரம்பித்த முதல் 30 நிமிடங்களுக்கு தடை செய்யப்படுவார்கள். அதாவது பொது முன்பதிவுக்கு காலை 8 முதல் 8 30 மணி வரையிலும், தட்கல் முன்பதிவுக்கு காலை 10 முதல் 10:30 மணி வரை ஏசிக்கும், காலை 11 முதல் 11:30 மணி வரை ஏசி அல்லாத வகுப்புகளுக்கும் முகவர்களுக்கான முன்பதிவு வசதி தடை செய்யப்பட்டுள்ளது.

6. ஈ- வாலட்டுகள் மற்றும் பண அட்டைகள் (கேஷ் கார்டுகள்) மூலம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை முன்பதிவு செய்ய முடியாது.

7. காலை 8 முதல் மதியம் 12 மணி வரை, ஒரு பயனர் ஐடியில் இருந்து, ரிட்டர்ன் டிக்கெட்டைத் தவிர ஒரே ஒரு டிக்கெட் முன்பதிவுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment