பொதுதேர்வு எழுத மையங்கள் தயார் செய்யும் பணி தீவிரம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 23, 2016

பொதுதேர்வு எழுத மையங்கள் தயார் செய்யும் பணி தீவிரம்

பிளஸ் 2 தனி தேர்வர்களுக்கு ஈரோடு, கோபி கல்வி மாவட்டங்களில் தலா இரு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஈரோடு, கோபி என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்தாண்டு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 25,756 மாணவ, மாணவிகள் 76 மையங்களில் எழுதுகின்றனர். மார்ச் நான்காம் தேதி தேர்வு துவங்கி ஏப். ஒன்றாம் தேதி வரை நடக்கிறது. இதே போல் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, 102 மையங்களில், 27,930 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வு மார்ச், 15ம் தேதி தேர்வு துவங்கி ஏப்.13ம் தேதி வரை நடக்கிறது.

பிப்., முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வு துவங்குகிறது. பசுவனபுரம், கல் கடம்பூர், ஆசனூர், தாளவாடி ஆகிய மலைப்பகுதியில் பிளஸ் 2 தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு இம்மையங்களுடன் பர்கூரும் சேர்க்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு கல்வி மாவட்டங்களிலும், தனி தேர்வர்களுக்காக தலா, இரண்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment