தமிழகத்திற்கு கூடுதலாக 1,000 எம்.பி.பி.எஸ்., இடம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, September 24, 2016

தமிழகத்திற்கு கூடுதலாக 1,000 எம்.பி.பி.எஸ்., இடம்

தமிழகத்தில், ஏழு சுய நிதி கல்லுாரிகளில், 1,000 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளின் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான, மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூனில் நடந்தது. அரசு கல்லுாரிகளில், 2,379 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; அரசு பல் மருத்துவக் கல்லுாரிகளில், 85; சுயநிதி கல்லுாரிகளில், 470 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின.

ஒதுக்கீடு பெற்ற, 143 பேர், இன்ஜினியரிங் உட்பட, பிற படிப்புகளில் சேர்ந்ததால், அந்த இடங்கள் காலி இடங்களாக மாறின. அவற்றுக்கும், சுயநிதி கல்லுாரிகளின், 970 பி.டி.எஸ்., இடங்களுக்கும் சேர்த்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, ஏழு சுயநிதி கல்லுாரிகளில், 1,000 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது; இதில், மாநில அரசின் ஒதுக்கீட்டிற்கு, 593 இடங்கள் கிடைத்துள்ளன. மேலும், மூன்று சுயநிதி கல்லுாரிகளில், பி.டி.எஸ்., படிப்புக்கு அனுமதி கிடைத்துள்ளதால், மாநில ஒதுக்கீட்டிற்கு, 275 பி.டி.எஸ்., இடங்களும் கிடைத்துள்ளன. இதையடுத்து, கலந்தாய்வில் கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன; வரும், 24ம் தேதி வரை கலந்தாய்வு நடக்க உள்ளது. கூடுதலாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் கிடைத்துள்ளது, காத்திருந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சியை
அளித்துள்ளது.

No comments:

Post a Comment