'தொழிலாளர் நல வாரியம் வழங்கும் கல்வி உதவித்தொகை பெற விரும்புவோர், அக்., 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு, தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிளஸ் 1 முதல், முதுகலை பட்டம் வரை படிக்கும் மாணவர்களுக்கு, புத்தகங்கள் வாங்குவதற்கான நிதியுதவி அளிக்கப்படுகிறது. பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், ஆசிரியர் பட்ட படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அரசு பொதுத் தேர்வில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிப்பில், மாவட்ட அளவில் முதல், 10 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, அவர்கள் மேல்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்களை, 'செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்.718, தேனாம்பேட்டை, சென்னை' என்ற முகவரியில், அக்., 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 044 - 2432 1542 என்ற எண்ணிலும், www.labour.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment