தீபாவளிக்காக 8 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: நாளை முன்பதிவு தொடங்குகிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 29, 2016

தீபாவளிக்காக 8 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: நாளை முன்பதிவு தொடங்குகிறது

வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவு நாளை (30-ம் தேதி) தொடங்கவுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை எழும்பூரில் இருந்து அடுத்த மாதம் 28-ம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82601) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். திருநெல்வேலியில் இருந்து அடுத்த மாதம் 30-ம் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82602) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து அடுத்த மாதம் 27-ம் தேதி இரவு 8.15 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82605) எழும்பூர் வழியாக மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இதேபோல், திருநெல்வேலியில் இருந்து அடுத்த மாதம் 28-ம் தேதி மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06006) மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

சென்னை சென்ட்ரல் இருந்து அடுத்த மாதம் 28-ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் அதி விரைவு சுவிதா சிறப்பு ரயில் (82621) மறுநாள் காலை 10.55 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இதேபோல், எர்ணாகுளத்தில் இருந்து அடுத்த மாதம் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சுவிதா சிறப்பு ரயில் (82622) மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

எர்ணாகுளத்தில் இருந்து அடுத்த மாதம் 27-ம் தேதி இரவு 8.15 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06016) மறுநாள் காலை 9.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். இதேபோல், வேளாங்கண்ணியில் இருந்து அடுத்த மாதம் 28-ம் தேதி மதியம் 2.20 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06015) மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வரும் 30-ம் தேதி (நாளை) தொடங்கவுள்ளது.

விடுமுறை தின சிறப்பு ரயில்

விடுமுறை தினத்தையொட்டி 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து அடுத்த மாதம் 21-ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06033) மறுநாள் காலை 10.55 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இதேபோல், எர்ணாகுளத்தில் இருந்து அடுத்த மாதம் 23-ம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06034) மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 29-ம் தேதி (இன்று) தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

2-வது கட்ட பட்டியல்?

தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘முதல்கட்டமாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சி, மதுரை போன்ற இடங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களின் பட்டியலை தயாரித்து வருகிறோம். 3 அல்லது 4 சிறப்பு ரயில்கள் இதில் இடம் பெறும். அடுத்த ஓரிரு வாரங்களில் இந்த அறிவிப்பு வெளியாகும்’’என்றார்.

No comments:

Post a Comment