வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, September 24, 2016

வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தும் வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தவிர்த்து ஊராட்சி, ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்குச்சீட்டு முறை அமல்படுத்தப்பட உள்ளது.

இதனை பயன்படுத்தப்படும் வாக்குச்சாவடிகளில் ஒரு தலைமை அலுவலர் மற்றும் 6 பேரை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. அதன்படி அடையாளம் காணும் அலுவலர், விரலில் மை வைக்கும் அலுவலர், ஊராட்சி தலைவருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், வாக்குப்பெட்டி பொறுப்பாளர் என ஆறுபேர் நியமிக்கப்பட உள்ளனர்.

சில ஊராட்சிகளில் பெரிய வார்டில் இரண்டு உறுப்பினர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதுபோன்ற வார்டு வாக்குச்சாவடிகளில் கூடுதலாக ஒரு அலுவலருடன் 8 பேர் பணியாற்றுவர். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதால், அந்த வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், அடையாளம் காணும் அலுவலர், விரல் மை வைக்கும் அலுவலர், கன்ட்ரோல் யூனிட் அலுவலர் என 4 பேர் நியமிக்கப்பட உள்ளனர். வாக்குச்சாவடி அலுவலர்களாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்க உள்ளது.

No comments:

Post a Comment