பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித்தேர்வான, 'நெட்' தேர்வில், யோகா பாடம் சேர்க்கப்பட்டுஉள்ளது. கல்லுாரி பேராசிரியர் பதவியில் சேரவும், மத்திய அரசின் உதவித்தொகையுடன், இளநிலை ஆராய்ச்சி மாணவராக சேரவும், 'நெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் ஜனவரியில் நடக்கவுள்ள இந்த தேர்வில், யோகா பாடம் சேர்க்கப்படுகிறது.
இதுகுறித்த அறிவிப்பை, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டு உள்ளது. யோகா பாடத் திட்டமும், அதிலுள்ள முக்கிய அம்சங்களும், யு.ஜி.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
No comments:
Post a Comment