தேர்தல் பணிக்கு 2.5 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் : காலாண்டு விடுமுறையை ரத்து செய்து பணிக்கு திரும்பினர்
உள்ளாட்சித் தேர்தல் பணியில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களை தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தியுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் முதல் வேட்பு மனுதாக்கலின் கடைசி நாள் வரை இவர்கள் பணியில் இருப்பார்கள். தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி என இரண்டு கட்டமாக நடக்கிறது.
இந்த தேர்தல் பணியில் தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 50 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களில் பள்ளி ஆசிரியர்கள் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர்.
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கான பணி உத்தரவு கடந்த வாரமே அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களாக அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஆசிரியருக்கு ஒரு ஊராட்சியை ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணி உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று 26ம் தேதி முதல் வேட்பு மனுக்களை பெற வேண்டும். அக்டோபர் 3ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்.
அன்று வரை ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. காலாண்டுத் தேர்வு விடுமுறையும் 3ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் ஆசிரியர்கள் காலாண்டு விடுமுறையில் தேர்தல் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை பொறுத்தவரை அவர்கள் பணி செய்யும் ஊரின் தேர்தல் பணிகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு நேற்று முன்தினம் இரவு வெளியானதால், ஏற்கெனவே தேர்தல் பணிக்கான உத்தரவு பெற்று வெளியூர் சென்றிருந்த ஆசிரியர்கள், பெண் ஆசிரியர்கள் நேற்று அவசர அவசரமாக தங்களுக்கான ஊராட்சிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
குறிப்பாக பெண் ஆசிரியர்கள், மாற்று திறனாளிகள் உட்பட பல்வேறு தரப்பினர் உடனடியாக சம்பந்தப் பட்ட மைய த்துக்கு செல்ல முடியமால் அவதிப்பட்டனர். அவர்களுக்கு தேவை யான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து தரவில்லை.
No comments:
Post a Comment