கருணைக் கொலை செய்யக் கோரி கணினி ஆசிரியர்கள் முதல்வர் தனிப்பிரிவில் மனு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 27, 2016

கருணைக் கொலை செய்யக் கோரி கணினி ஆசிரியர்கள் முதல்வர் தனிப்பிரிவில் மனு

கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று முதல்வர் தனிப் பிரிவிலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர் இதுவரை கணினி அறிவியலில் 39019பேர் பி.எட் படித்துள்ளனர் அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினி அவை சார்ந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன ஆனால் அங்கு கணினி ஆசிரியர்கள் மட்டும் நியமிக்கபடவில்லை என்றும் தங்கள் நீண்ட நாள் கோரிக்கைய  தமிழக அரசு 
விரைவில் நிறைவேற்ற வேண்டி கோரிக்கை மனு வழங்கினர்.

கணினி ஆசிரியர்கள் நீண்ட நாள் கோரிக்கைகள்:

1.கணினி அறிவியல் பாடத்தை ஆரம்ப கல்வியிலிருந்து கொண்டுவர வேண்டும்..

2.6முதல் 10வரை கணினி அறிவியல் பாடத்தை நடைமுறை படுத்தி கட்டாயப்படமாக்க வேண்டும்.

3.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் இருந்தும் ஆசிரியர்கள் இல்லாமல் செயல்படுகின்றன.
மாணவர்கள் விகிதச்சாரம் கணினி ஆசிரியர்கள் பணியிடத்தில் பின்பற்ற படுவதில்லை.
(*கணினி ஆய்வகங்களில் குறைந்த அளவு 50கணிப்பொறி இருக்க வேண்டும்*)

4.2006ம் ஆண்டுக்கு மேல் தரம் உயர்த்தம் செய்யப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லை அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடப்பிரிவு கொண்டுவரவேண்டும்.

5.அனைத்து(தொடக்க,நடுநிலை,உயர்நிலை, மேல்நிலை) அரசுப் பள்ளிகளில் கட்டாயம் ஓர் கணினி ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.

6.அரசு நிறுவனங்களில் அனைத்து துறையிலும் கணினி சாரந்து உள்ளதால் அங்கு எங்களைப் போன்ற கணினி பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் வழங்கவேண்டும்.

முதல்வர் தனிப்பிரிவில் மாற்றுத்திறனாளிகளான பாலகிருஷ்ணன்,வெங்கடேசன் ஆகியோர் தங்களை கருணைக் கொலை செய்யும் படி மனு அளித்தனர் வேலையில்லாமல் பல ஆண்டுகள் வருமையில் வாடும் தங்களுக்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே எங்களை கருணை கொலை செய்யும் படி முதல்வருக்கும் பள்ளிக் கல்வி அமைச்சரிடமும் மனு அளித்தனர்.

   வெ.குமரேசன்,
       9626545446,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

No comments:

Post a Comment