தமிழகத்தில் 75 ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறை 'நோட்டீஸ்'!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 27, 2016

தமிழகத்தில் 75 ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறை 'நோட்டீஸ்'!!!

தமிழகத்தில், வருமான வரி ஏய்ப்பு செய்த, 'பான் கார்டு' இல்லாத, 75 ஆயிரம் பேருக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைந்தது முதல், வருமான வரித் துறை பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகம் உட்பட, நாட்டின் பல

பகுதிகளில், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், பெரிய நிறுவனங்களில், அடிக்கடி, 'ரெய்டு' நடத்தப்பட்டு, கணக்கில் வராத, பல ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் அசையா சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


காலக்கெடு : தாமாக முன்வந்து வருமான வரி செலுத்தும் சிறப்பு திட்டத்தை, ஜூன் முதல் மத்திய அரசு அறிவித்தது. 'கறுப்புப் பணம் மற்றும் கணக்கில் வராத இதர சொத்துக்களை வைத்திருப்போர், அதை தெரிவித்து, 45 சதவீதம் அபராதம் செலுத்தினால், விலக்கு பெறலாம்' என, அறிவிக்கப்பட்டது. அதற்கான காலக்கெடு, வரும், 30ம் தேதியுடன் முடிகிறது. இந்த நிலையில், வருமான வரித்துறையினர், வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியை

தீவிரப்படுத்தி உள்ளனர்.


இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: பல நிறுவனங்கள், ஏராளமான தனி நபர்கள், பான் கார்டு இன்றி, வருமான வரி வரம்புக்கு அதிகமான பரிவர்த்தனைகளில் ஈடுபட்டது தெரிய வந்தது. நகைக் கடைகள், பத்திரப்பதிவு அலுவலகங்கள், வங்கி டிபாசிட்டுகள், பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்ட, ஆயிரக்கணக்கான பரிவர்த்தனைகளை கண்காணிக்க, சிறப்பு தகவல் தொகுப்பை ஏற்படுத்தியுள்ளோம்.


நடவடிக்கை : இதுநாள் வரை, கண்காணிக்கப்படாமல் இருந்து வந்த, பல பரிவர்த்தனைகளை கண்காணிக்க துவங்கி உள்ளோம். அதன் அடிப்படையில், வருமான வரி ஏய்ப்பு செய்த, பான் கார்டு பயன்படுத்தாத, ஏழு லட்சம் பேருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில், 75 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்டுள்ளோம். தாமாக முன் வந்து வரி செலுத்தும் திட்டத்தின் கீழ், பல ஆயிரம் பேருக்கு, தமிழகத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு

உள்ளது. உடனடியாக விளக்கம் தர வேண்டும்; இல்லாவிட்டால், கெடு முடிந்த மறுநாளில் இருந்து நடவடிக்கை துவங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment