லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு 'கூகிள் ஸ்டேஷன்' என்ற கட்டமைப்பின் மூலம் வேகம் மற்றும் செயல் திறன் உள்ள இலவச 'வைஃபை' வசதியை வழங்க உள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது.
பிரபல இணைய தேடுபொறி நிறுவனமான கூகிள் இன்று தனது 18-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. அதை ஒட்டி தில்லிக்கு அருகே உ ள்ள குர்கிராமத்தில் இன்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூகிளின் 'அடுத்த பில்லியன் பயனாளர்கள்' பிரிவின் இணை இயக்குனர் சீஷர் சென்குப்தா தெரிவித்ததாவது:
கூகிள் இன்று முதல் 'கூகிள் ஸ்டேஷன்' என்ற கட்டமைப்பை இந்தியாவில் கூகிள் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் பொதுமக்கள் அதிகமாக கூடுகின்ற வணிக வளாகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், உணவு விடுதிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகிய இடங்களில் இலவச வைஃபை' வசதி வழங்கப்படும்.
இதன் மூலம் மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களிலிருந்து சில நிமிட தூர நடையில் அதிவேக இணைய வசதியை பெற முடியும்.
இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகிள் நிறுவனம் தற்போது மத்திய ரயில்வேயின் 'ரயில்டெல்' நிறுவனத்துடன் இணைந்து நாடுமுழுவதும் 52 ரயில்நிலையங்களில், இலவச 'வைஃபை' வசதியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment