ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ்!: தமிழக மின், போக்குவரத்து ஊழியர் களுக்கும் அதிர்ஷ்டம்:கடந்த ஆண்டை விட கூடுதலாக ஒரு மடங்கு கிடைக்கும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 29, 2016

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ்!: தமிழக மின், போக்குவரத்து ஊழியர் களுக்கும் அதிர்ஷ்டம்:கடந்த ஆண்டை விட கூடுதலாக ஒரு மடங்கு கிடைக்கும்

புதுடில்லி:தீபாவளி பண்டிகையையொட்டி, ரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாள் ஊதியத்தை
போனசாக வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசும், மின், போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது.

தீபாவளியையொட்டி, அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது; அதன்படி, ரயில்வே ஊழியர்களுக்கு, கடந்த நிதியாண்டுக் கான போனசாக, 78 நாள் ஊதியத்தை அளிக்க, பிரதமர் மோடி தலைமையில், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டது.

ரயில்வே ஊழியர்களுக்கு, கடந்த, நான்கு ஆண்டுகளும், 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது; இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள, 12 லட்சம் ஊழியர்களுக்கு, இந்த போனஸ் கிடைக்கும். மத்திய அரசுக்கு, இதனால், 2,090 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு, பல்வேறு ரயில்வே சங்கங்கள் வரவேற்பு
தெரிவித்துள்ளன.அதே போல், 'மின் வாரியம், போக்குவரத்து கழகம், நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு, 20 சதவீத போனஸ் வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஏழாவது ஊதிய சம்பள கமிஷன்படி, கடந்த ஜனவரி முதல், மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதால், போனசும் அதற்கேற்ப கணக்கிட்டு வழங்கப் படும் என்பதால், கூடுத லாக ஒரு மடங்கு தொகை அவர்கள் பெற வாய்ப்புண்டு.

20 சதவீத தீபாவளி போனஸ்: ஜெ., அறிவிப்பு:'

மின் வாரியம், போக்குவரத்து கழகம், நுகர் பொருள் வாணிப கழகம் மற்றும் பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு, 20 சதவீத போனஸ் வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

* போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பு, 21 ஆயிரம் ரூபாயாக, மத்திய அரசால் உயர்த் தப்பட்டுள்ளது. அதை தளர்த்தி, அனைத்து, 'சி' மற்றும், 'டி' பிரிவு தொழிலாளர்களுக்கும், போனஸ் வழங்கப்படும்
* லாபம் ஈட்டியுள்ள, பொதுத் துறை நிறுவனங் களில், 8.33 சதவீதம் போனஸ்; 11.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம், 20 சதவீதம் வழங்கப்படும்
* நஷ்டம் அடைந்துள்ள, பொதுத்துறை நிறுவனங்களில், 8.33 சதவீதம் குறைந்தபட்ச போனஸ்; 1.67 சதவீதம் கருணைத் தொகை என, 10 சதவீதம் வழங்கப்படும்
* மின் வாரியம், அரசு போக்குவரத்து கழகங்கள்,நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் களுக்கு, 20 சதவீதம் வழங்கப்படும்
* லாபம் ஈட்டிய கூட்டுறவு சங்கங்களில், 20 சதவீதம்; பிற கூட்டுறவு சங்கங்களில், 10 சதவீதம் வழங்கப்படும்.* வீட்டு வசதி வாரியம், சென்னை குடிநீர் வாரிய, 'சி' மற்றும், 'டி' பிரிவு பணியாளர் களுக்கு, 10 சதவீதம் வழங்கப்படும்; தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினருக்கு, 8.33 சதவீதம் வழங்கப்படும்
* அரசு ரப்பர் கழகம், தேயிலை தோட்ட கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் ஆகியவற்றில், 10 - 20 சதவீதம் வழங்கப்படும்
* பாடநுால் கழக, 'சி' மற்றும், 'டி' பிரிவு பணியாளர்களுக்கு, 20 சதவீதம் வழங்கப்படும்
* லாபம் ஈட்டியுள்ள, கூட்டுறவு வீட்டு வசதி சங்க, 'சி' மற்றும், 'டி' பிரிவு பணியாளர்களுக்கு, 20
சதவீதம்; மற்ற பணியாளர்களுக்கு, 10 சதவீதம் வழங்கப்படும்
* மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, 4,000 ரூபாய்; நுகர்பொருள் வாணிபக் கழக தற்காலிக ஊழியர்களுக்கு, 3,000 ரூபாய் வழங்கப்படும்
* போனஸ் சட்டத்தில் வராத, தலைமை கூட்டுறவு சங்க தொழிலாளர்கள், மாவட்ட கூட்டுறவு சங்க தொழிலாளர்களுக்கு, 3,000 ரூபாய்; தொடக்க கூட்டுறவு சங்க தொழிலாளர் களுக்கு, 2,400 ரூபாய் வழங்கப்படும்
* இதன்மூலம், நிரந்தரத் தொழிலாளர்கள், 8,400 முதல், 16,800 ரூபாய் வரை போனஸ் பெறுவர். பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், 3.67 லட்சம் தொழிலாளர்களுக்கு, 477 கோடி ரூபாய் போனசாக வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment