தேர்தல் விதிமீறல் புகார் தெரிவிக்க 3 இலவச அழைப்பு எண்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 27, 2016

தேர்தல் விதிமீறல் புகார் தெரிவிக்க 3 இலவச அழைப்பு எண்கள்

தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் கண்காணிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன், புகார் அளிக்க இலவச எண்களையும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நியாயமாகவம், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடப்பதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தல் அடுத்து வரும் தேர்தல்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைய பல்வேறு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடைமுறையில் உள்ள மாதிரி நன்னடத்தை விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படுகிறது. மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைதளத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை பெற, அலுவல் மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட 24 மணி நேரமும் இயங்கும் புகார் மையம்அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக இலவச அழைப்பு அடிப்படையிலான, 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 ஆகிய தொலைபேசி எண்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 044-2363 5011, 044- 2363 5010 ஆகிய வரவேற்பு எண்கள், 044- 2363 1014, 1024,1074 ஆகிய நிகரி (பேக்ஸ்) எண்களிலும் தங்கள் புகார்களை அனுப்பலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment