ரயில்வேக்கு இனி தனி பட்ஜெட் கிடையாது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 22, 2016

ரயில்வேக்கு இனி தனி பட்ஜெட் கிடையாது

ரயில்வேக்கு இனி தனி பட்ஜெட் கிடையாது

பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்படும் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு, மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது. இதை தொடர்ந்து, ரயில்வே துறைக்கு இனி தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட மாட்டாது.

கடந்த 1924-ம் ஆண்டு முதல் ரயில்வேக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் இது மரபாக இருந்து வருகிறது. ஆண்டு தோறும், பொது பட்ஜெட்டுக்கு முன்னதாக ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதும் வழக்கமாக தொடர்ந்து வருகிறது. கடந்த பா.ஜ.க. ஆட்சியிலேயே ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், நிறைவேற்ற முடியவில்லை.

அதன் பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்ததும், மீண்டும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 5 பேர் கொண்ட குழுவை மத்திய நிதியமைச்சகம் நியமித்தது.

இந்தக் குழு சமீபத்தில் அளித்த அறிக்கையில், ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைக்கலாம் என்று பரிந்துரை செய்தது. இதனை மத்திய நிதியமைச்சகம் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து, வருகின்ற நிதியாண்டு முதல் பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைத்து தாக்கல் செய்யப்பட உள்ளது.

அதேபோல், 2017-18-ம் நிதியாண்டு முதல் பொது பட்ஜெட் பிப்ரவரி 28-ம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. அதனால், பட்ஜெட் தொடர்பான அனைத்து துறைகளின் பரிந்துரைகளும் வருகின்ற நவம்பர் 15-ம் தேதிக்குள் இறுதி செய்யப்படும். பிப்ரவரி முதல் வாரத்தில் பொது பட்ஜெட் இனி தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment