பிஎப் பணம் எடுக்க மொபைல் ஆப் வருகிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 27, 2016

பிஎப் பணம் எடுக்க மொபைல் ஆப் வருகிறது

பிஎப் பணத்தை எடுக்க மொபைல் ஆப் அறிமுகம் செய்ய பிஎப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.  பிஎப் பணத்தை எடுக்க வசதியாக மொபைல் ஆப் வர உள்ளது. இது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும்.
இதன்மூலம் இ-கேஒய்சி முறையில் ஆதார் எண்ணை அடிப்படையாக வைத்து விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும். தற்போதைய முறையில் பிஎப் பணம் எடுக்க அல்லது பென்ஷனுக்கு விண்ணப்பித்தல் என அனைத்தும் அதற்கான படிவத்தை நிரப்பி நேரில் சென்று வழங்க வேண்டும். இதற்கு மாற்றாக, மொபைல் ஆப்ஸ் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை பிஎப் நிறுவனம் வழங்க உள்ளது.

இந்த ஆன்லைன் சேவையை அளிக்க முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 123 பிஎப் அலுவலகங்களில் இருந்து பிஎப் சந்தாதாரர்களின் விவரங்கள் பெறப்பட்டு, டெல்லியில் உள்ள மத்திய அலுவலக சர்வரில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது பணியாற்றிய நிறுவனம் உள்ளிட்ட விவரங்கள் ஆப்ஸ் மூலமாகவே பெறப்படும். பணியில் இருந்து ஓய்வுபெறும் அல்லது விலகும் தொழிலாளர் நேரடியாகவே விண்ணப்பிக்கலாம் என்று பிஎப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment