முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: ஜூன் 10–ந் தேதி பொது நுழைவுத்தேர்வு!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 15, 2016

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: ஜூன் 10–ந் தேதி பொது நுழைவுத்தேர்வு!!

புதுடெல்லி,நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு ‘என்.இ.இ.டி.’ என்னும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு முறையை பின்பற்றுமாறு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.அந்த வகையில் டி.எம்., மற்றும் எம்.சி.எச்.,

முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஜூன் மாதம் 10–ந் தேதி தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் வாரியம் நேற்று அறிவித்தது.இது ஒற்றைச்சாளர முறையிலானது.இந்த தேர்வு கணினி அடிப்படையிலானது. இந்திய மருத்துவ கல்லூரிகளில் பின்பற்றப்பட்டு வருகிற எம்.டி., மற்றும் எம்.எஸ்., பாடத்திட்டங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment