பள்ளி குழந்தைகளிடையே அதிகரிக்கும் போதை பழக்கத்தை தடுக்க நடவடிக்கை மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 15, 2016

பள்ளி குழந்தைகளிடையே அதிகரிக்கும் போதை பழக்கத்தை தடுக்க நடவடிக்கை மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!!!

புதுடெல்லிநோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி நடத்தி வரும் தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், பள்ளி குழந்தைகளிடையே அதிகரித்து வரும் போதை பழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மையங்கள் அமைக்கவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த வழக்கை தலைமை நீதிபதி
டி.எஸ்.தாக்குர், நீதிபதி சந்திரசூட் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் நேற்று தங்கள் உத்தரவில் கூறியதாவது:–18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், குறிப்பாக பள்ளி குழந்தைகளிடையே போதை பழக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த பழக்கத்தால் நாளடைவில் அவர்கள் போதைக்கு அடிமையாக நேரிடும் அபாயம் உள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக நாடு முழுவதும் போதை பழக்கத்துக்கு அடிமையான குழந்தைகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.குழந்தைகளிடையே அதிகரிக்கும் போதை பழக்கத்தை தடுக்க 6 மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளி பாடப்புத்தகங்களில் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து இடம்பெற செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment