டிச.26-ல் அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்வி இயக்க தேர்வு தொடக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 17, 2016

டிச.26-ல் அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்வி இயக்க தேர்வு தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத் தேர்வுகள், டிசம்பர் 26-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன என பதிவாளர் கே.ஆறுமுகம் அறிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 தேர்வுக்கு பதிவு செய்துள்ள தேர்வர்கள், அவர்களுக்குரிய தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை, அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளம் மூலம் (www.annamalaiuniversity.ac.in) அறிந்துகொள்ளலாம். மேலும், இதுகுறித்த விவரங்களை அருகிலுள்ள பல்கலைக்கழக படிப்பு, தகவல் மையங்களிலும் தெரிந்துகொள்ளலாம். செய்முறை, வாய்வழி தேர்வுகளுக்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.
 தேர்வுகள் நாட்டின் பல்வேறு மையங்களில் நடைபெறும். தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை (Hall Ticket) பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து சனிக்கிழமை (டிச.17) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
 மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். மின்னணுப் பொருள்களை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றார் பதிவாளர் கே.ஆறுமுகம்.

No comments:

Post a Comment