ரூ.5000 டெபாசிட் கட்டுப்பாடு : தளர்த்தியது ஆர்பிஐ - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 21, 2016

ரூ.5000 டெபாசிட் கட்டுப்பாடு : தளர்த்தியது ஆர்பிஐ

ரூ.5000 டெபாசிட் கட்டுப்பாடு : தளர்த்தியது ஆர்பிஐ
ரூ.5000 க்கு மேல் பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்தி உள்ளது. பழைய ரூ. 500, 1000 நோட்டுக்களை டெபாசிட் செய்வதற்கு புதிய கட்டுப்பாடு ஒன்றைய சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்பவர்கள், ரூ.5000 மட்டுமே டிபாசிட் செய்ய முடியும்.
அதற்கு மேல் டிபாசிட் செய்யப்பட்டால், அது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாட்டை தளர்த்துவதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, கேஒய்சி விபரங்களை முழுமையாக அளித்தவர்கள் ரூ.5000 க்கு மேல் டெபாசிட் செய்யலாம். கேஓய்சி விபரங்களை அளிக்காதவர்கள் ஒருமுறை ரூ.5000 மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment