SSLC தமிழ் தேர்வுக்கு படிக்க விடுமுறைவழங்க வேண்டும்: தேர்வுத்துறை இயக்குநரிடம் தமிழாசிரியர்கள் முறையீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 21, 2016

SSLC தமிழ் தேர்வுக்கு படிக்க விடுமுறைவழங்க வேண்டும்: தேர்வுத்துறை இயக்குநரிடம் தமிழாசிரியர்கள் முறையீடு

எஸ்எஸ்எல்சி மாணவர்கள் தமிழ் 2-ம் தாள் தேர்வுக்கு படிக்க விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குநரிடம் தமிழாசிரியர்கள் நேரில் முறையிட்டனர்.
தமிழகத் தமிழாசிரியர் கழக மாநில சிறப்புத் தலைவர் ஆ.ஆறு முகம், மாநிலப் பொதுச்செயலாளர் புலவர் சு.நாகேந்திரன் ஆகியோர் அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவியை சென் னையில் நேற்று சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிகிறது. தேர்வுக்கால அட்ட வணையில், தமிழ் 2-ம் தாள் தவிர பிற பாடங்களுக்கு படிக்க வசதியாக தேர்வுக்கு முன்பாக 3 நாட்கள் மற்றும் அதற்கும் மேலாக விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் 2-ம் தாளுக்கு மட்டும் இதுபோன்று விடு முறை விடப்படவில்லை.
முதல் முறையாக மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத இருப்பதால் புதிய தேர்வு மையம், புதிய சூழல் போன்றவற்றால் தடுமாறு கிறார்கள்.தமிழ் 2-ம் தாளுக்கு படிக்க கால அவகாசம் இருந்தால் தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள மிகவும் வசதியாக இருக்கும். மேலும், தமிழ் பாடத்தில் தேர்ச்சி விழுக்காடும் அதிகரிக்கும். எனவே, மற்ற பாடங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதைப் போன்று தமிழ் 2-ம் தாளுக்கும் தேர்வுக்கு படிக்க வசதியாக விடுமுறை அளிக்க வேண்டும். அதற்கேற்ப திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்ட வணையை வெளியிட வேண்டும்.

No comments:

Post a Comment