
புதுக்கோட்டை,ஜீலை.15: புதுக்கோட்டையில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் காமராஜரின் 119 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும்,திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காமராஜர் அவர்கள் தமிழக முதல்வராக இருந்த பொழுது அதிக அளவிலான பள்ளிகளைத்திறந்தார்.மாணவர்களிடம் ஏற்றத் தாழ்வுகளை போக்க மதிய உணவுத்திட்டம்,இலவச சீருடைகள் திட்டம் கொண்டு வந்தார்.விவசாயத்திற்காக பல்வேறு அணைகளை கட்டினார்.தொழிற்சாலைகளை நிறுவ காரணமாக இருந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தீட்டினார்.அத்தகைய சாதனைக்கு சொந்தக்காரரான காமராஜர் அவர்களின் பிறந்த நாளை தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் 2006 ஆம் ஆண்டு முதல் ஜீலை 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என அறிவித்தார்.எனவே காமராஜர் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதம் இன்றைய தினம் புதுக்கோட்டையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது என்றார்.
நிகழ்வில் மாவட்டச் செயலாளர் க.சு.செல்வராஜ்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ந.ரவிச்சந்திரன்,ஒன்றியச் செயலாளர் வெங்கடேஷன் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment