‛தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் பெற புதிய நடைமுறை 17-ம் தேதி முதல் அமல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 12, 2015

‛தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் பெற புதிய நடைமுறை 17-ம் தேதி முதல் அமல்

‛தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் புதிய முறை வரும் 17-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

‛தட்கல்’ முறையில் பாஸ்போர்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் வழக்கம் போல் ‛ஆன் லைன்’ மூலம் நேர்காணலுக்கு அனுமதி பெற்றுவிட்டு பின்னர் வளசரவாக்கம், அமைந்தகரை மற்றும் தாம்பரத்தில் உள்ள ஏதாவது ஒரு பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு சென்று நேர்காணலில் பங்கேற்று வந்தனர்.

ஆனால், ‛தட்கல்’ முறையில் விண்ணப்பிப்பவர்களின் ஆவணங்களை மிகவும் கவனமாக பரிசீலிக்க வேண்டியுள்ளதால் அவர்களுக்கான நேர்காணல் சென்னை, அண்ணாசாலை, ராயலா டவர்ஸ் கட்டிடத்தில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இனி நடைபெறும்.

இப்புதிய நடைமுறை வரும் 17-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment