தமிழக சட்டசபை 21–ந்தேதி கூட வாய்ப்பு? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 12, 2015

தமிழக சட்டசபை 21–ந்தேதி கூட வாய்ப்பு?

தமிழக சட்டசபை 21–ந்தேதி கூட வாய்ப்பு?
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் 25–ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதன் பிறகு 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதன் பிறகு சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.வழக்கமாக பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் ஒவ்வொரு துறை வாரியாக மானிய கோரிக்கை எடுத்து கொள்ளப்படுவது வழக்கம். இதில் எம்.எல்.ஏ.க்கள் பேசிய பிறகு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் விரிவாக பதிலளித்து பேசுவார். சுமார் 1 மாதம் இந்த கூட்டம் நடைபெறுவது உண்டு.ஆனால் கடந்த மார்ச் மாதம் சட்டசபை கூட்டம் நடந்தபோது ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக இருந்தார்.சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி, மே 23–ந்தேதி ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்றதும் உடனடியாக சட்டசபை கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஜூன் மாதம் நடந்தது. இதில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா எம்.எல்.ஏ.வாக நின்று வெற்றி பெற்றார். இதனால் ஜூலையில் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.ஆனாலும் தேர்தல் முடிந்து 40 நாட்கள் ஆகியும் சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை.இதற்கிடையே ஐகோர்ட்டில் நடந்த ஒரு வழக்கு விசாரணையின் போது, மலிவுவாக்கம் கட்டிட விபத்து குறித்த விசாரணை கமிஷன் அறிக்கை ஆகஸ்டு மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.இதனால் சட்டசபை கூட்டத்தொடர் இந்த மாத இறுதிக்குள் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.அநேகமாக வருகிற 21–ந்தேதி சட்டசபை கூட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment