டி.என்.பி.எஸ்.சி.,குருப்-2 தேர்வு; நேரடி நியமனக் கலந்தாய்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 19, 2015

டி.என்.பி.எஸ்.சி.,குருப்-2 தேர்வு; நேரடி நியமனக் கலந்தாய்வு

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014-இல் அடங்கிய நேர்முகத் தேர்வு, பதவிகளுக்கான நேரடி நியமனக் கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 24ல் தொடங்கி செப்டம்பர் 1ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தெரிவித்துள்ளது.

1,136 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு நேர்காணலில் கலந்து கொண்ட அனைத்து 2,222 விண்ணப்பதாரர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இப்பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு, 08.11.2014 மற்றும் 09.11.2014 ஆகிய நாட்களில் நடைபெற்றது. நேர்காணல் 15.07.2015 முதல் 08.08.2015 வரை நடைபெற்றது.  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வில், விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்கள் பட்டியல் 10.08.2015 அன்று தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் அழைப்புக்கடிதம், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்புக்கடிதம் வரப்பெறாதவர்கள் அதனை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் தவறாமல் கலந்தாய்வில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு வருகைதரத் தவறும்பட்சத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அதன் பின்னர் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.

No comments:

Post a Comment