3 ஆண்டுகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, August 21, 2015

3 ஆண்டுகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்

தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் தனியார் சுயநிதி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையிலான குழு ஒவ்வொரு பள்ளிகளின் கட்டமைப்பு வசதியை அடிப்படையாக கொண்டு கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்கிறது.2015–16, 2016–17, 2017–18 ஆகிய 3 கல்வி ஆண்டுகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் வாரியாக (அரியலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி தவிர) பள்ளிகளுக்கான கட்டண விவரம் தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in) நேற்று வெளியிடப்பட்டது.எல்.கே.ஜி. வகுப்பு முதல் பிளஸ்–2 வரை கல்வி கட்டணம் ஆண்டு வாரியாக குறிப்பிட்ட தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள் இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 12 ஆயிரம் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சென்னை மாவட்டத்தில் 76 தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்.கே.ஜி. படிப்புக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5,900. அதிகபட்ச கட்டணம் ரூ.46,948. பிளஸ்–2 படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.3,500–ம் அதிகபட்சம் ரூ.52,393–ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment