தமிழகத்தில் கடந்த 4 ஆண்டில் கல்விக்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: அமைச்சர் வீரமணி பேச்சு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 22, 2015

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டில் கல்விக்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: அமைச்சர் வீரமணி பேச்சு

ஜோலார்பேட்டையில் உள்ள டான்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு தலைமை பள்ளி தாளாளர் அருட்தந்தை கிளமெண்ட், தலைமை ஆசிரியர் செபாஸ்டியன் முத்துராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். நகர மன்ற தலைவர் வசுமதி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.சி.வீரமணி
கலந்து கொண்டு 95 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:–
மாணவர்களின் கல்வி அறிவை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு இலவச லேப்டாப், சைக்கிள், என எண்ணற்ற உபகரணங்கள் வழங்கி வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு மாணவர்களுக்காக பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் கல்விக்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் எதிர்கால கல்விக்காக 10–ம் வகுப்பு படிக்கும் போதே அவர்கள் மீது 5 ஆயிரம் உதவிகள் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் நகர கவுன்சிலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஏசுராஜ் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment