துணை மருத்துவப் படிப்புகளுக்காக நடைபெற்று வரும் கலந்தாய்வில், சனிக்கிழமை முடிவில் 4,299 இடங்கள் காலியாக இருந்தன.
பி.எஸ்சி. செவிலியர், இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட 9 துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
கலந்தாய்வு தொடங்கிய சில தினங்களில் அரசு இடங்கள் அனைத்தும் (557 அரசு இடங்கள்) பூர்த்தியாகின. தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் தனியார் கல்லூரிகளில் உள்ள 540 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பூர்த்தியாகின. மீதம் 4,299 இடங்கள் காலியாக உள்ளன. தொடர்ந்து ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment