500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு இடமாறுதல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 17, 2015

500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு இடமாறுதல்

தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இணையவழி கலந்தாய்வில் இடமாறுதல் வழங்கப்பட்டது.
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 249 பேர் அந்தந்த மாவட்டங்களுக்குள்ளும், 171 பேர் மாவட்டம் விட்டு மாவட்டமும் இடமாறுதல் பெற்றனர்.
சிறப்பாசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெற்ற கலந்தாய்வில் ஓவிய ஆசிரியர்கள் 32 பேருக்கும், இசை ஆசிரியர்கள் 15 பேருக்கும், உடற்கல்வி ஆசிரியர்கள் 45 பேருக்கும், இடைநிலை ஆசிரியர்கள் 56 பேருக்கும், தையல் ஆசிரியர்கள் 9 பேருக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் வழங்கப்பட்டது. அடுத்ததாக, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இதற்கான பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் 1 முதல் 450 வரை இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற உள்ள கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment