கலை, அறிவியல் கல்லூரிகளில் 658 இடங்கள் காலி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 15, 2015

கலை, அறிவியல் கல்லூரிகளில் 658 இடங்கள் காலி

கலை, அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள 658 இடங்களுக்கு, ஐந்தாம் கட்ட கவுன்சிலிங் வரும் 20ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள கலை அறிவியல் கல்லுாரிகளிர் சேர்வதற்கான கலந்தாய்வு, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் நான்கு கட்டமாக நடந்தது. இடம் கிடைத்த மாணவர்கள் உடனடியாக கல்லுாரியில் சேர்ந்தனர். குறைவான மதிப்பெண் எடுத்த 3 ஆயிரம் மாணவர்களுக்கு அரசு கல்லுாரிகளில் இடம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் மொத்தம் 2108 இடங்கள் உள்ளன.

நான்காம் கட்ட கவுன்சிலிங் முடிவில் 1450 இடங்கள் நிரம்பி விட்டன. மீதமுள்ள 658 இடங்களுக்கான கவுன்சிலிங் வரும் 20, 21ம் தேதிகளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த மாண வர் சேர்க்கை (கப்பாஸ்) கன்வீனர் சசிகாந்ததாஸ் கூறுகையில், &'தரவரிசை பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு கவுன்சிலிங் அழைப்பு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றிருந்தால் கவுன்சிலிங் நடக்கும் தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் பங்கேற்கலாம். தரவரிசைப் பட்டியல் கப்பாஸ் அலுவலகத்திலும், http://bgcw.puducherry.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

17ம் தேதி வகுப்பு துவக்கம்

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. வரும் 17ம் தேதி முதலாமாண்டு மாணவிகளுக்கு வகுப்புகள் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment