> > இரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம்.
இரவீந்தரநாத் தாகூர் (வங்காள மொழி:
மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசிரியர் இவரே ஆவார்.
இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பதுண்டு. இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இரவீந்திரநாத் தாகூர் தேவேந்திரநாத், சாரதா தேவி தம்பதியினருக்கு 1861 ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி (1861-05-09) பிறந்தார். இவரது பிறந்த இடம் கொல்கத்தாவில் இருந்த ஜோராசாங்கோ மாளிகை ஆகும்.
1901ல் தாகூர் ஷிலைடஹாவிலிருந்து (Shilaidaha) சாந்தினிகேதனுக்குக் குடியேறினார். அங்கு அவர் ஒரு ஆசிரமத்தை நிறுவினார். அங்கு அவர் ஒரு பிரார்த்தனைக் கூடம், ஒரு பாடசாலை, நூலகம் என்பவற்றை நிறுவி, மரங்கள் பலவற்றையும் நட்டு ஓர் அழகிய பூஞ்சோலையை உருவாக்கினார். இங்கே தாகூரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இறந்து போயினர்.
1940ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் சாந்திநிகேதனுக்கே வந்து அவருக்கு டாக்டர் ஆப் லிட்ரேச்சர் என்ற விருது வழங்கியது. அவரின் 80வது பிறந்த நாள் விழா 1941ல் சாந்திநிகேதனில் கொண்டாடப்பட்டது. அந்த நாட்களில் அவரது உடல் மேலும் பலவீனம் அடைந்திருந்தது. கல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றது, எனினும் சிகிச்சை பலனின்றி 7 ஆம் தேதி ஆகஸ்ட் திங்களில் அவரது உயிர் உடலைப் பிரிந்தது.
No comments:
Post a Comment