அரசியன் நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயமானது அல்ல என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே அடையாள அட்டை வழங்கும் வகையில் ஆதார் அட்டை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் உதவிகள் பெற ஆதார் அட்டை அவசியம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல் ஊதியம் பெறுவது, திருமணப் பதிவு, சொத்துகள் பதிவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க சில மாநிலங்கள் திட்டமிட்டுள்ளதற்கும் எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உள்பட ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும், அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசும் வலியுறுத்தி இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செலமேஸ்வர், எஸ்.ஏ. போப்டே, சி.நாகப்பன் ஆதார் அட்டை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பினர்.
அதன் பிறகு வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டனர். இன்றைய விசாரணையின் முடிவில் அரசின் நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயமல்ல; ஆதார் எண் கட்டாயம் அல்ல என்பதை மக்களுக்கு ஊடகங்கள் மூலம் அரசு தெரிவிக்க வேண்டும். ஆதாருக்காக சேகரிக்கப்படும் விவரங்களை அந்நிறுவனம் பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது; பொதுவிநியோகத் திட்டம், சிலிண்டர் வழங்கலுக்கு ஆதார் எண்ணை அரசு கேட்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment