சென்னையில் நந்தம்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம் மற்றும் முகப்பேர் ஆகிய இடங்களில், ரவீந்திரபாரதி குளோபல் ஸ்கூல் என்ற பெயரில், தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளி செயல்படுகிறது.
இந்தப் பள்ளியில், நீதிபதி சிங்காரவேலர் கமிட்டி நிர்ணயித்ததை விட அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக, கடந்த இரு வாரங்களுக்கு முன் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
ஆனால், தொடர்ந்து அந்தப் பள்ளி சார்பில் அதிக அளவு
கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் பெற்றோர்கள் தரப்பில் நேற்று, டி.பி.ஐ., வளாகத்திலுள்ள சிங்காரவேலர் கமிட்டி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பெற்றோர் பிரதிநிதிகள், நீதிபதி சிங்காரவேலர் முன் ஆஜராகி, கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, இந்தப் பிரச்னையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், ரவீந்திரபாரதி குளோபல் பள்ளி, அடுத்த உத்தரவு வரும் வரை, இரண்டாம் பருவக் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது, எனக் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment