இடம் கிடைக்குமா? கிடைக்காதா?: ரெயில் பயணத்தை திட்டமிட தகவல்கள் தரும் சாப்ட்வேர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 8, 2015

இடம் கிடைக்குமா? கிடைக்காதா?: ரெயில் பயணத்தை திட்டமிட தகவல்கள் தரும் சாப்ட்வேர்

ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வது என்பது சாதாரண காரியமல்ல. 90 நாட்கள் அல்ல 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய முயன்றாலும் குறிப்பிட்ட சில ரெயில்களில் இடம் கிடைப்பது இல்லை.தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களிலும், கோடை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களிலும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பது பெரிய சவாலாக இருக்கிறது.இதனால் ரெயில் பயணிகளுக்கு உதவுவதற்காக ரெயில் யாத்திரி என்ற அமைப்பு ஒருசேவையை தொடங்கியுள்ளது. ரெயில் யாத்திரி ஆப் சாப்ட்வேரை டவுண்லோடு செய்வதன் மூலம் இந்த வசதியை பெறலாம்.எந்த தேதியில் எந்த ரெயிலுக்கு டிக்கெட் கிடைக்கும்? வாய்ப்பு அதிகமாக உள்ளது, டிக்கெட் கிடைப்பது சிரமம், என்பது போன்ற முன் கூட்டியே தகவல்களை இந்த ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.2–ம் வகுப்பு படுக்கை வசதி மட்டுமின்றி உயர் வகுப்புகளிலும் படுக்கைகள் கிடைக்குமா? என்பதை இந்த சாப்ட்வேர் மூலம் அறிந்து கொள்ளலாம்.பயணம் செய்ய விரும்பும் நாளில் ரெயிலில் இடம் கிடைக்குமா, என்பதை முன் கூட்டியே தெரிந்து கொள்ள பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தலாம். நவீன ஸ்மார்ட் போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் எங்கிருந்தும் தெரிந்து கொண்டு ஓரளவிற்கு பயண திட்டத்தை வகுக்க முடியும்.ரெயில் எண், பி.என்.ஆர். விவரம், எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும், வகுப்பு போன்ற விவரங்களை 'ஆப்'–ல் பதிவு செய்தால் பயணத்தை உறுதி செய்ய வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment