கூடுதல் பொறுப்பால் தலைமையாசிரியர்களுக்கு பணிச்சுமை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 4, 2015

கூடுதல் பொறுப்பால் தலைமையாசிரியர்களுக்கு பணிச்சுமை

மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் அனைத்திலும் கூடுதல் பொறுப்பாக தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் பணிச்சுமை அதிகரித்துள்ளது.

             மேலுார் கல்வி மாவட்ட அலுவலராக இருந்த சீமான் பதவி உயர்வு பெற்று தர்மபுரி சென்றார். அந்த இடத்தில் விரகனுார் அரசு பள்ளித் தலைமையாசிரியர் சங்கரநாராயணன் கூடுதல் பொறுப்பு வகித்தார். அவரும் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று சென்ற நிலையில், தற்போது குலமங்கலம் பள்ளி தலைமையாசிரியர் லோகநாதன் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.

உசிலம்பட்டி மாவட்ட கல்வி அலுவலரான சுப்பிரமணியன் ஓய்வு பெற்ற பின் ராமசாமிபுரம் அரசு பள்ளித் தலைமையாசிரியர் ராமகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

மதுரை மாவட்ட கல்வி அலுவலரான கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். அந்த இடத்திற்கு வலையங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியை ரேணுகா கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ளார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக இருந்த சுப்பிரமணியன், முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வில் சென்ற பின் அங்கும் கூடுதல் பொறுப்பாக மேலுார் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் துரைபாண்டியன் நியமிக்கப்பட்டார்.

பள்ளிகளின் வழக்கமான செயல்பாடுகளையும், கூடுதலாக நிர்வாகப் பணிகளையும் சேர்ந்து கவனிப்பதால் பணிச்சுமை ஏற்படுதாக புகார் எழுந்துள்ளது. கல்வி அதிகாரி ஒருவர், தலைமயைாசிரியர்கள் கூடுதல் பொறுப்பு வகிப்பதால் கல்வி பணிகள் பெரும்பாலும் பாதிக்க வாய்ப்பில்லை.

நிர்வாகம் மற்றும் வழக்கமான பள்ளி செயல்பாட்டை கவனிக்க வேண்டியிருப்பதால் பணிச்சுமை அதிகரிக்கும். விரைவில் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட உள்ளது, என்றார்.

No comments:

Post a Comment