"8ஆம் வகுப்பு வரை நிச்சயம் தேர்ச்சி என்ற கொள்கைக்கு விரைவில் முடிவு' - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, August 2, 2015

"8ஆம் வகுப்பு வரை நிச்சயம் தேர்ச்சி என்ற கொள்கைக்கு விரைவில் முடிவு'

பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களை நிச்சயம் தேர்ச்சி பெற வைக்கும் கொள்கையை மத்திய அரசு விரைவில் முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா தெரிவித்தார்.இதுதொடர்பாக மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

நமது நாட்டில் தொடக்கநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் தொடக்க நிலை கல்வியின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. எனவே, முந்தைய அரசுகளால் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 8ஆம் வகுப்பு வரை மாணவர்களை நிச்சயம் தேர்வில் தேர்ச்சி பெற வைக்கும்கொள்கையை முடிவுக்கு கொண்டு வர இருக்கிறோம்.முந்தைய அரசுகளின் கொள்கைப்படி, 8ஆம் வகுப்பு வரை வெற்றி பெறச் செய்ய வைக்கப்படும் மாணவர்கள், 9ஆம் வகுப்பில் திறன்பட செயல்படுவதில்லை என்று ஆசிரியர்களும், பொது மக்களும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment