குப்பைகளை அகற்றி ஊரை சுத்தப்படுத்திய மனநோயாளியை பொதுமக்கள் அரவணைத்து அவரது தலைமுடியை மழித்து புதுப்பொலிவுபடுத்தினர். அவரை மீட்டு மாவட்ட நிர்வாகம் சிகிச்சை அளித்து பராமரித்தால் இயல்பான மனிதராக மாற வாய்ப்புள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தல குண்டு பஸ் நிலையத்தில் கொடைக் கானலைச் சேர்ந்த ரெங்கராஜன் என்பவர் கடந்த 2 மாதங்களாக பயணிகள், கடைக்காரர்கள் வீசும் குப்பைகளை தேங்காமல் உடனுக் குடன் அகற்றி குப்பைத்தொட்டி யில் போட்டு, பஸ் நிலையத்தை ஒரு துப்புரவு தொழிலாளிபோல் சுத்தமாக பராமரித்து வருகிறார்.
மனநோயாளியான இவரது சமூக அக்கறையைப் பார்த்த பஸ் நிலையத்துக்கு வரும் மற்ற பயணிகள், அப்பகுதி மக்கள், கடைக்காரர்கள் தற்போது மனம் திருந்தி குப்பைகளை திறந்த வெளியில் வீசாததால் பஸ் நிலை யம் தூய்மையாக உள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’ நாளி தழில் கடந்த 14-ம் தேதி ‘மன நோயாளியால் மனம் திருந்திய மக்கள்’ என்ற செய்தி வெளி யானது. இந்தச் செய்தி, கடந்த சில நாட் களில் வாட்ஸ் அப், பேஸ்புக் மூலம் பல ஆயிரக்கணக்கானோரால் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து குளிக்காமல் பல மாதங்களாக தாடி மற்றும் சிக்குபிடித்த தலைமுடியுடன் சுற்றித் திரிந்த மனநோயாளி ரெங்கராஜனை நேற்று முன்தினம் அப்பகுதி பொதுமக்கள் சலூன் கடைக்கு அழைத்துச் சென்று தலைமுடியை மழித்தனர். அதனால், புதுப்பொலிவு பெற்ற ரெங்கராஜன் வழக்கம்போல் பஸ் நிலையத்தில் துப்புரவு தொழிலாளி போல் குப்பைகளை அகற்றி வருகிறார்.
ரெங்கராஜன் மனநோயாளி என்பதால் முன்பு அவரது முகத் தைக்கூட ஏறெடுத்து பார்க்கா மல் கடை முன்னால் வந்தாலே அவரை திட்டி விரட்டியடித்த கடைக்காரர்கள், பஸ் டிரைவர் கள், பொதுமக்கள் தற்போது மரியாதை யுடன் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
ரெங்கராஜனை மீட்டு மாவட்ட நிர்வாகம் சிகிச்சை அளித்து பராமரித்தால் இயல்பான மனிதராக மாற வாய்ப்புள்ளது என்று வத்தலகுண்டு பொதுமக்கள் விருப்பம் தெரிவித்தனர்
No comments:
Post a Comment