ஒரே பதவி வகித்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரே ஓய்வூதியம் திட்டம் ஜூலை 1 2014 முதல் கணக்கிட்டு செயல்படுத்தப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் டெல்லியில் அறிவித்துள்ளார்.
முன்னதாக, ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அரசு இன்றே வெளியிடலாம் என்ற தகவல் வெளியானது. அதற்கேற்ப மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் பாஜக தலைவர் அமித் ஷாவை (சனிக்கிழமை) சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மனோகர் பரிக்கர், "கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் மத்திய அரசு ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது என முடிவெடுத்துள்ளது.
இத்திட்டம் ஜூலை 1 2014 முதல் கணக்கிட்டு செயல்படுத்தப்படும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்படும். 2013-ல் வழங்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் வழங்கப்படும்.
நிலுவைத்தொகையானது 4 தவணைகளில் வழங்கப்படும்.
விருப்பு ஓய்வு பெறும் வீரர்கள் புதிய திட்டத்தின் கீழ் சலுகை பெற முடியாது" என்றார்.
No comments:
Post a Comment