பிளஸ்-2 மாணவர்கள் மடிக்கணினி பெற ஆதார் எண் தேவை: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, September 9, 2015

பிளஸ்-2 மாணவர்கள் மடிக்கணினி பெற ஆதார் எண் தேவை: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா மடிக்கணினி வழங்குவதற்கு முன்பாக மாணவர்களிடம் ஆதார் எண் பெறப்படவேண்டும். பிளஸ்-2 சான்றிதழ் வழங்கும்போது மாணவ-மாணவிகளிடம் அவர்களுடைய ஆதார் எண் பெற்று உரிய பதிவேட்டில் குறித்துவைத்துக்கொள்ளவேண்டும். பெறப்பட்ட ஆதார் எண் விவரத்தை மடிக்கணினி வழங்க ஏதுவாக எல்காட் ஆன்லைனில் பதிவு செய்திட வேண்டும். அனைத்து மாவட்ட பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளின் ஆதார் எண் பெற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும் அறிக்கை அனுப்புங்கள்.

இவ்வாறு கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ஆனால் கடந்த கல்வி ஆண்டில் படித்தவர்களுக்கு பெரும்பாலான இடங்களில் மடிக்கணினி வழங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment