அனைவருக்கும் கல்வி' திட்டம்: மத்திய அரசு நிதி 50% ஆகக் குறைகிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 11, 2015

அனைவருக்கும் கல்வி' திட்டம்: மத்திய அரசு நிதி 50% ஆகக் குறைகிறது

அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கான (சர்வ சிக்ஷா அபியான்) தனது நிதிப் பங்களிப்பை 65 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைத்துக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்தத் தேவைப்படும் நிதியில், மத்திய அரசின் பங்களிப்பு 65 சதவீதமாகவும், வடகிழக்கு மாநிலங்கள் நீங்கலாக பிற மாநில அரசுகளின் பங்களிப்பு 35 சதவீதமாகவும் உள்ளது. இந்த நிலையில், இதற்கான தனது நிதிப் பங்களிப்பை 50 சதவீதமாக குறைத்துக்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
14-ஆவது நிதி ஆணைத்தின் பரிந்துரைப்படி, மாநிலங்களுக்கு அதிக அளவு வரிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டியுள்ளதைக் கவனத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.
அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு, கடந்த 2014-15ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.27,758 கோடி ஒதுக்கிய நிலையில், நிகழ் நிதியாண்டில் இந்த நிதி ரூ.22,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்கது.

No comments:

Post a Comment