பள்ளி செல்லும் ஏழை குழந்தைகளுக்கு, இலவச பால் அளிக்கும் திட்டத்துக்கு உதவுமாறு, தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து,என்.டி.டி.பி.,எனப்படும்,தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரிய தலைவர் நந்தகுமார், டில்லியில், நேற்று கூறியதாவது:
பள்ளி செல்லும் ஏழை குழந்தைகளுக்கு இலவச பால் வழங்க,என்.டி.டி.பி.,ஊட்டச்சத்து அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு,பால் கூட்டுறவு சங்கங்களுடன்,ஒருங்கிணைந்து செயல்படும்.
இதன் மூலம்,கார்ப்பரேட் நிறுவனங்கள்,சி.எஸ்.ஆர்.,எனப்படும்,கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ்,ஏழை குழந்தைகளுக்கு பால் வழங்கலாம். நாட்டின் ஏழ்மையான பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு,முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இவ்வாறு நந்தகுமார் கூறினார்.
No comments:
Post a Comment