பள்ளி மாணவர்களுக்கான கடிதம் எழுதும் போட்டி: அஞ்சல் துறை அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, September 12, 2015

பள்ளி மாணவர்களுக்கான கடிதம் எழுதும் போட்டி: அஞ்சல் துறை அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான கடிதப் போட்டியை இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆண்டுதோறும் அக்டோபர் 9 முதல் 15 வரை, தேசிய அஞ்சல் வார விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வரிசையில், நிகழாண்டுக்கான கடிதம் எழுதும் போட்டி அக்டோபரில் நடைபெறவுள்ளது. அனைத்து அஞ்சல் பிரிவு தலைமையகத்திலும் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலும், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலும் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
இவர்களுக்கு இரண்டு பிரிவுகளில் தனித் தனியாகப் போட்டிகள் நடத்தப்படும். "எனது விடுமுறையை எப்படி கழிப்பேன்', "எனது பள்ளியில் ஒரு நாள்', "எனக்குப் பிடித்தமான புத்தகம்' ஆகியவற்றை மையக் கருவாகக் கொண்டு கடிதங்களை எழுதலாம்.
இவ்வாறு எழுதப்படும் கடிதங்கள், போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் தாத்தா, பாட்டிகளுக்கு அனுப்பப்படும்.
எனவே, மாணவர்கள் தங்களின் தாத்தா, பாட்டிகளின் முகவரிகளையும் சேர்த்து அனுப்ப வேண்டும். ஒவ்வொரு அஞ்சல் பிரிவிலும், தேர்வு செய்யப்படும் முதல் 3 பேரின் கடிதங்கள் மாநில அளவிலும், பின்னர் தேசிய அளவிலும் மதிப்பாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தகுந்த பரிசுகள் வழங்கப்படும். கடிதம் எழுதும் போட்டிகள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சல் நிலையங்களை அணுகலாம் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment