இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 47 சதவீத இடங்கள் காலியாக உள்ளதால், புதிய கல்லுாரிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமா என்பது குறித்து, மாநில அரசுகளிடம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான - ஏ.ஐ.சி.டி.இ., கருத்து கேட்டுள்ளது.
நாடு முழுவதும், பி.இ., - பி.டெக்., தொழில்நுட்ப கல்வி அளிக்கும், 10 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் உள்ளன; இந்தக் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டில் அனுமதிக்கப்பட்ட, 16.90 லட்சம் இடங்களில், 8.5 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. இது, மொத்த இடங்களில், 47 சதவீதம்.
இந்த நிலை ஏன் என்பது குறித்து, ஏ.ஐ.சி.டி.இ., ஆய்வு நடத்தியது. அதில், பெரும்பாலான கல்லுாரிகளில், அடிப்படை விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை; நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப பாடம் நடத்த தகுதியான ஆசிரியர்கள் இல்லை என, தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், மாநிலங்களில் இன்ஜினியரிங் கல்லுாரிகளை நிர்வகித்து வரும், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகங்கள் சார்பில், மத்திய அரசுக்கு பல கடிதங்கள் எழுதப்பட்டு உள்ளன. அவற்றில், &'இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு புதிதாக அங்கீகாரம் தரும் போது, கடுமையான பல விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்&' என, வலியுறுத்தி உள்ளன. இதையடுத்து, அனைத்து மாநிலங்களின், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகங்களுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., கடிதம் அனுப்பியுள்ளது. அதில், புதிய கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்குவது மற்றும் இருக்கும் கல்லுாரிகளை முறைப்படுத்துவது தொடர்பான கருத்துகளைத் தெரிவிக்கும்படி கோரியுள்ளது.
No comments:
Post a Comment