ஆதரவற்ற குழந்தைகளை அரசு காப்பகங்களில் சேர்க்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 25, 2015

ஆதரவற்ற குழந்தைகளை அரசு காப்பகங்களில் சேர்க்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

அரசு குழந்தைகள் காப்பகங்களில் ஆதர வற்ற குழந்தைகளை சேர்க்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு சார்பில், பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள், தந்தை அல்லது தாய் மட்டும் உள்ள குழந்தைகள் மற்றும் தீராத நோய் அல்லது மனநலம் குன்றிய பெற்றோரினால் பாதுகாக்க இயலாத நிலையில் உள்ள குழந்தைகளை பராமரிப்பதற்காக குழந்தைகள் காப்பகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த காப்பகங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு தங்கும் இடம், உணவு, உடை, மருத்துவ வசதி, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி ஆகியவை வழங்கப்படுகின்றன.

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் சென்னை வால்டாக்ஸ் சாலை பொன்னப்பன் சந்து மற்றும் சென்னை கொசப்பேட்டை சச்சிதானந்தம் தெரு ஆகிய இடங்களில் குழந்தைகள் காப்பகங்கள் செயல்படுகின்றன.

தொடர்புக்கு...

இந்த காப்பகங்களில் 5 வயது முதல் 10 வயது வரையுள்ள ஆண் குழந்தைகள், 18 வயது வரையுள்ள பெண் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். குழந்தை களை சேர்ப்பது தொடர்பாக 8098756782, 9677082653 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தனது அறிவிப்பில் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment