எஸ்.எஸ்.ஏ., திட்ட உபகரணங்கள் கிடப்பில் உள்ளதாக புகார் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, September 9, 2015

எஸ்.எஸ்.ஏ., திட்ட உபகரணங்கள் கிடப்பில் உள்ளதாக புகார்

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அலுவலக உபகரணங்கள் பழுதான நிலையில், அவற்றை சரிசெய்து பயன்படுத்தாமல் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல
மாவட்டத்தில் பல வட்டார வள மையங்கள் உள்ளன. இங்கு ஆசிரியர்களுக்கான பயிற்சி, மீளாய்வுக் கூட்டங்கள் நடத்துவது, சுற்றறிக்கைகள் அனுப்புவது உட்பட கல்வி மற்றும் நிர்வாகப் பணிகள் நடக்கின்றன.

இம்மையங்களுக்கு ஜெனரேட்டர், நகல் மெஷின்கள், கணினி, எஜூசாட்டிற்கான வீடியோ கான்பரன்சிங் உபகரணம் உட்பட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் பல மையங்களில் இந்த உபகரணங்கள் பழுது காரணமாக, மாதக் கணக்கில் பராமரிப்பின்றி முடங்கிக் கிடக்கின்றன. இவற்றை பழுது நீக்கினால் நன்றாக பயன்படுத்த முடியும் என்ற சூழ்நிலை இருந்தும், அவை குறித்து அக்கறை செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது.

மேலும், மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்க பள்ளிகளிலே மையங்கள் அமைக்கப்பட்டன. அப்பள்ளிக்கு வகுப்பறைகள் தேவைப்பட்டதால், அந்த அறைகள் காலி செய்யப்பட்டன. அதன்பின் அங்கிருந்த ரூ. பல லட்சம் மதிப்பிலான உபகரணங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இத்திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், அனைத்து மையங்களிலும் உபகரணங்கள் கிடப்பில் உள்ளன என கூற முடியாது. சில மையங்களில் இப்பிரச்னை உள்ளன. முழு அளவில் உபகரணங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment