"பணி நிரந்தரம் செய்வது அவசியம்': ஆசிரியர்கள் தனித்தனியே மனு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 3, 2015

"பணி நிரந்தரம் செய்வது அவசியம்': ஆசிரியர்கள் தனித்தனியே மனு

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, ஆசிரியர்கள் வலியுறுத்தினர். தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க தலைவர் தமிழரசு தலைமையிலான ஆசிரியர்கள், ஈரோடு கலெக்டர் பிரபாகரிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து தமிழரசு கூறியதாவது: தமிழகத்தில், 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளனர். 2012ம் ஆண்டு மார்ச் மாதம், 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பகுதி நேர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டோம். இம்மாவட்டத்தில், 436 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளனர். இதில், 300க்கும் மேற்பட்டோர் பெண்கள். தற்போது, 7,000 ரூபாய் சம்பளம் பெறுகிறோம். வாரத்தில் மூன்று நாட்கள் பணி இருக்கும். எனவே, வேறு எந்த வேலைக்கும் நாங்கள் செல்ல முடியாது என்ற நிலை உள்ளது. தமிழகம்
முழுவதும், கலெக்டர்க ளிடம் சங்கத்தினர் பணி நிரந்தரம் கோரி, மனு கொடுக்கின்றனர். இதே போல் நாங்கள் மனு கொடுத்துள்ளோம், என்றார். இதே போல், தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரையும், எவ்வித தகுதி தேர்வும் இல்லாமல், கல்வி ஆண்டு முதல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் காலதாமதம் செய்யும்பட்சத்தில், பணி நிரந்தரத்துக்கான காலவரையறை செய்து, அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் இருந்து, பள்ளி கல்வி துறைக்கு மாற்றம் செய்து, கல்வியாண்டின் அனைத் து வேலை நாட்களிலும், முழு நேர பணி வழங்க வேண்டும். இதுகுறித்து கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment