சிறுபான்மையின மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டங்களின்கீழ் 2015-16ம் ஆண்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
1-8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் வரும் செப்., 25க்குள் சமர்ப்பிக்க வேண்டும். 9ம்வகுப்பு முதல் பிஎச்.டி., மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில்வோர் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடு வரும் அக்., 15 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment