நாளை (இன்று) நடக்கவிருக்கும் வேலை நிறுத்த போராட்டத்தினால், பள்ளிகள் செயல்படுவதில் தடை ஏற்படாது என திருப்பூர் மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு துறைகளில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள், நாளை (இன்று) (2ம்தேதி) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
அரசு போக்குவரத்துக்கழகத்தில் உள்ள சங்கத்தினரும், பங்கேற்பதற்கு வாய்ப்புள்ளதாக சில சங்கத்தினர் தகவல் கூறியுள்ளனர். இதனால் பஸ்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள் இயங்குவதில் எந்த பாதிப்பும் இல்லை என கல்வித்துறை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் கூறுகையில், வேலை நிறுத்த போராட்டத்திற்கும், பள்ளிகள் செயல்படுவதற்கும் என்ற தொடர்பும் இல்லை. திருப்பூர் மாவட்டத்தில் அனைத்துப்பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும் என்றார்.
No comments:
Post a Comment