கல்வியில் மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிப்பு: இந்திய மாணவர்கள் சங்க மாநாட்டில் கண்டனம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 7, 2015

கல்வியில் மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிப்பு: இந்திய மாணவர்கள் சங்க மாநாட்டில் கண்டனம்

கல்வியில் மாநில அரசுகளுக்கான அதிகாரங்களை மத்திய அரசு பறித்து வருவதாக, புதுச்சேரியில் நடந்த இந்திய மாணவர்கள் சங்க மாநாட்டில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக-புதுவை மாநில இந்திய மாணவர் சங்க மாநாடு, புதுவையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:
புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு, மத்திய அரசுகள் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையை பின்பற்றுவதை கைவிட வேண்டும், கல்விக் கட்டண குளறுபடிகள் களையப்பட்டு, மாணவர்களுக்கான நலத்திட்டங்கள், கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,
தாய்மொழி வழியில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதன் காரணத்தை ஆராய்ந்து அரசுப் பள்ளிகளில் உள்ள கட்டமைப்புகளைப் பலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியில் மாநில அரசுகளுக்கான அதிகாரங்களைப் பறிப்பதோடு கல்வியை முழுமையாக மத்தியத்துவப்படுத்தி வருகிறது. இதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment