இனி மின் இணைப்பு பெறுவது சுலபம்: விரைவில் இணையதள விண்ணப்ப வசதி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, September 9, 2015

இனி மின் இணைப்பு பெறுவது சுலபம்: விரைவில் இணையதள விண்ணப்ப வசதி

இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அலைச்சல் இல்லாமல், சுலபமாக புதிய மின் இணைப்பு பெறும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா விரைவில் துவக்கி வைக்கிறார்.

தமிழகத்தில், பிறப்பு, இறப்பு, வருமானம், சாதி சான்றிதழ் மற்றும் கடை துவக்குவதற்கான அனுமதி போன்றவற்றை பெற, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. இதன் மூலம், மக்கள் அலைச்சல் இல்லாமல், தங்களுக்கு வேண்டிய ஆவணங்களை, உரிய கட்டணம் மட்டும் செலுத்தி, சுலபமாக பெறுகின்றனர். ஆனால், புதிய மின் இணைப்பு பெற வேண்டும் எனில், தமிழ்நாடு மின் வாரியத்திடம், விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படி, விண்ணப்பம் வழங்கிய, 30
நாட்களுக்கு, புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும். அப்பகுதியில் டிரான்ஸ்பார்மர் பொருத்த
வேண்டும் எனில், 90 நாட்களுக்குள் வழங்க வேண்டும். ஆனால், விண்ணப்பித்து, பல நாட்கள் ஆகியும், மின் இணைப்பு வழங்காமல், மின் வாரிய ஊழியர்கள் அலைக்கழிப்பதாகவும், லஞ்சம் வாங்கிய பின்னரே, மின் இணைப்பு வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, புதிய மின் இணைப்பிற்கு, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும்
திட்டத்தை செயல்படுத்த, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். தற்போது, இதற்கான மென்பொருள் தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. எனவே, விரைவில், இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்க உள்ளார்.

No comments:

Post a Comment